பொருந்தாத ஜோதிட விதிகள்-
பொங்கும் ஆய்வாளர்கள் :
-----------------------------------------------------------
ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் 36,38,40,42 அங்குலம் என்ற தர அளவுகளில் ஆடைகள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.செருப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் 6,7,8,9 அங்குலம் என்ற தர அளவுகளில் செருப்பு தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இவர்கள் யாரும் எந்த ஒரு தனி மனிதனையும் மனதில் வைத்து பொருள் தயாரிப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்கு பொருந்தும் வகையில் தயாரிக்கிறார்கள். எனக்கு 40 அளவில் உள்ள சட்டை கொஞ்சம் இருக்கமாக இருக்கிறது, 42 அளவு சட்டை கொஞ்சம் தொய்வாக தொள தொளவென்று இருக்கிறது. ஆனால் 41 அளவில் ஆயத்த ஆடைகள் கிடைப்பதில்லை. இது போல்தான் ஜோதிட விதிகளும். பெரும்பாலானவர்களுக்கு பொருந்தி வருவதைத்தான் விதிகளாக சொல்லியிருகிறார்கள். ஒரு சிலர் எனக்கு பொருந்தவில்லை பொருந்தவில்லை என்று சொல்கிறார்கள். ஓரிரு ஜாதகங்களுக்கு பொருந்த வில்லை என்றால் ஜோதிட விதி தவறு என்ற முடிவுக்கு வராதீர்கள். குறைந்தது ஒரு விதியை 100 ஜாதகங்களில் பொருத்திப்பார்த்து முடிவுக்கு வாருங்கள். தனக்கென்று தைக்கப்படாத சட்டை போன்றவை தான் ஜோதிட விதிகள்.
No comments:
Post a Comment