ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?
✌இரண்டே விஷயம் தான்.
☝ஒன்றாவது விஷயம் :
எது நமக்கு கிடைக்கும்.. எது நமக்கு கிடைக்காது என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக நாம் போராட வேண்டியநிலை ஏற்படாது. எது ஜாதக பிரகாரம் கிடைக்காதோ ,அது நிச்சயமாக கிடைக்காது.
ஜாதகம் பார்ப்பவர்களுக்கு உறுதியாக கூறிவிடுவேன் அதாவது இது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று.
ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக செய்யும் வீணான முயற்சிகளை விட்டுவிட்டாலே வாழ்க்கை வெற்றியில் சென்றுவிடும். கிடைக்கும் என்ற விடயத்தில் காலம் , நேரம் , சூட்சுமம் ஊடாக அருமையாக அடைய முடியும்.
சொந்தவீட்டு யோகம் இல்லாத ஒருவருக்கு உங்களிற்கு இந்த யோகம் இல்லை என அறிவுறுத்தியும் அவர் கேட்காது தனது வாழ்க்கையில் தன்னை வறுத்தி பணம் சேர்த்து வீடுவாங்கும் முயற்சியில் ஏமாந்து பணம் இழந்தவர்களை எமக்கு தெரியும்.
சிலருக்கு நீண்டகால வீட்டுக்கடன் அமைந்து கடனாளி ஆனாலும் நல்ல வீடு அமையும் . வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் உண்டு இதேபோலவே வெளிநாடு சென்று கடனாளியாக திரும்பியவர்கள் நிறைய உண்டு.
வெளிநாடு செல்லும் யோகம் என்பது வேறு . மற்றும் பணம் சம்பாதிக்கும் யோகம் என்பது வேறு சொந்தமாக வியாபாரத்தில் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க யோகம் என்பது வேறு. தொழில் ஆரம்பித்து கடனாளியாக உள்ளவர்களும் உண்டு இவர்களுக்கு ஜோதிடர்கள் சரியாக வழிகாட்டினாலே , அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப தம் வாழ்வை மாற்றியமைத்து உயர முடியும்.
✌இரண்டாவது விஷயம் என்னவெனில்:
எனக்கு என்ன நடக்க போகின்றது என அறிந்து நம்மை பக்குவப்படுத்தும் நிலை வரும். மற்றும் “எனக்கு ஏன் இப்படி நடந்தது” என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்.
இன்னும் ஒரு விஷயம் ,
பரிகாரம் எந்தளவுக்கு வேலை செய்கிறது என்பதனை நிர்ணயிக்க முடியாது. ஆனால் மனம் ஆன்மீக வழி சென்று , பரம்பொருளான இறையருளை பெற்று தரும். அவர் கருணை, அன்பு கிடைக்கும்.
ஜாதகம் உங்கள் நிலையறிந்து உங்களை எவ்வழியிலும் நல்வழிப்படுத்தவே ஜோதிடர்கள் வாயிலாக உங்களுக்கு உரைக்கப்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் என்ன சொல்கிறது என பார்த்து அதுசார்ந்த முற்பிறப்பு தவறால் இந்த பிறப்பில் தண்டனை அனுபவிக்கின்றீர்கள் என உணர்ந்து செய்த தவறிற்கு பரிகாரம் செய்வதும் இனி நல்ல பாதையில் செல்வது உங்கள் கையிலே.
இதுவே உங்களை இனி காக்கும்... இல்லாவிட்டால் இறைவன் மீதான அதீத அன்பினால் அவரால் உங்கள் பாவங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
அவ்வளவு தூயபக்தி இக்கலியுகத்தில் ஏற்படுவது மிக மிக அரிது. ஏற்பட்டாலும் இறைவனின் ஆராதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆகவே இயலுமானவரை தர்மவழியில் , நீதி, நேர்மையுடன் சென்று அகத்தில் இறைவனை இருத்தி உத்தமர்களாக வாழ இந்த ஜோதிட கலையினை உபயோகப்படுத்துவீர்களாக.
No comments:
Post a Comment